தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் (18.10.2024) - எவ்வளவு தெரியுமா ?தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் (18.10.2024) - எவ்வளவு தெரியுமா ?

தற்போது தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் (18.10.2024) அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. today gold rate in tamilnadu 18.10.2024

தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது, அந்த வகையில் அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.

இவ்வாறு வரியை குறைத்ததன் எதிரொலியாக தங்கத்தின் விலை அன்றைய தினம் அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயர ஆரம்பித்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. today gold rate in chennai

அந்த வகையில் இன்று தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனை தற்போது செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *