Home » செய்திகள் » இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !

இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !

இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800-ம் நேற்று முன்தினம் ரூ.960-ம் என சவரனுக்கு ரூ.1,760 குறைந்தது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,840-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top