பாலக் ரைஸ்: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு Today Lunch Box என்ன சமையல் செய்து தரலாம் என்று அவர்களது தாய்மார்கள் தினமும் குழம்புவது வழக்கமான ஒன்று. இது பள்ளிக்கு செல்லும் வயதில் இருக்கும் குழந்தைகள் வீட்டில் அன்றாடம் நடக்கும் போராட்டம். சாப்பாடு கட்டிக் கொடுத்தால் அப்படியே திருப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் கம்ப்ளைன்டாக இருக்கிறது. பிள்ளைகளை கேட்டா அவர்கள ஒரே வார்த்தையில் பிடிக்கலன்னு சொல்லி விடுகிறார்கள்.
Today Lunch Box: பட்டுச் செல்லங்களுக்கு ஆரோக்கிய லஞ்ச்… பாலக் ரைஸ்
எது செய்து கொடுத்தாலும் குழந்தைகளை மட்டும் எளிதில் திருப்தி அடைய வைக்க முடியாது. இவர்களை சாப்பிடவும் வைக்கணும், அதே சமயம் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கணும். அதன் அடிப்படையில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் கருதி எளிய முறையில் விரும்பி உண்ணும் ரெசிபிக்களை இங்கு வழங்கி உள்ளோம்.
பாலக் ரைஸ்:
தேவையான பொருட்கள்
பாலக்கீரை – 1/2 கப்
அரிசி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச் அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கி யது) – 1/2 கப்
Also Read: போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்!
முந்திரி -3
உலர்ந்த திராட்சை -5-7
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கிராம்பு-2
தண்ணீர் – 400 மி.லி.
செய்முறை:
சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் அரிசியை ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, மஞ்சள் தூள் பொடியாக நறுக்கிய முந்திரி, திராட்சையை சேர்த்து வதக்கவும்.
கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம், பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். அதனுடன் அரிசியைச்சேர்த்து மிக்ஸ் செய்யவும். மிளகுத்தூள் மற்றும் போதுமான உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
தண்ணீரைச் சேர்த்து நன்கு கலந்து, கலவையை குக்கருக்கு மாற்றவும். சுமார் 1-2 விசில் விட்டு இறக்கவும். சூடாறிய பின்பு குக்கரை நீக்கி, தயாரான சாதத்தை பிரட்டவும். சுவையான பாலக் ரைஸ் தயார்.
குறிப்பு:
4 கீரையை மிக்ஸியில் அரைத்தும் பயன்படுத்தலாம்.சாமை, வரகு, ப்ரவுன் அரிசியிலும் செய்யலாம். பாலக்கீரையில் வைட்டமின், மெக்னீசியம், ஜின்க், காப்பர் சத்துக்கள் உள்ளன. மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு ஏற்றது.
Today Online News in Tamil (08.01.2025)
பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்: மாணவர்கள் ரூ. 82,000 உதவித்தொகை பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு.., குஷியில் பயணர்கள்!!
hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்.. ஆஹா பிரமாதம்.., ரொம்ப டேஸ்ட்டா இருக்கே!.., எங்கே தெரியுமா?
2025ல் சிறந்த 8 மியூச்சுவல் ஃபண்டுகள்.., இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் உறுதி!!