![தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில்., பயணிகளின் கதி என்ன?., பின்னணி காரணம் இதானா?](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-288-jpg.webp)
ரயில் தடம்புரண்டு விபத்து
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பேவரைட் இடமாக இருந்து வரும் ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பும் உதகை மலை ரயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தினசரி சென்று வருகின்றனர். இந்த ரயில் வனப்பகுதிக்குள் செல்வதால் இயற்கை காட்சிகள் அதிகம் காணப்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அதிக நாட்டம் காட்டி வருகின்றனர் . அந்த வகையில் வழக்கம் போல் இன்று பெர்ன்ஹில் அருகே ரயில் செல்லும் போது திடீரென வளர்ப்பு எருமை ஒன்று குறுக்கே வந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/1-273-jpg.webp)
இதை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனே வண்டியை நிறுத்த பிரேக் போட்டுள்ளார். அப்போது ரயில் வேகமாக வந்த நிலையில், திடீரென பிரேக் போட்டதால் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணம் செய்த மக்கள் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.