Home » செய்திகள் » Today Rain Update – இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Today Rain Update – இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Today Rain Update - இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Today Rain Update – இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனீ, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது இங்கு 64.5 -115.5 mm வரை மழைக்கான வாய்ப்பு அதிகம். அதே வேளையில் கரூர் மாவட்டத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் 100 சதவீதம் கிடையாது. மேலும் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வானிலை:

தென்காசி மாவட்டம் சிவகிரியில் அதிகமாட்சமாக 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மாவட்டம் – 37.6° செல்சியஸ்.

குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் மாவட்டம் பரமத்தி – 20.0° செல்சியஸ்.

மேற்கண்ட வானிலை அறிக்கை சென்னை வானிலை மையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது என்பது குறிபிடத்தக்கது. மேலும் தங்கள் மாவட்டத்தின் முழு நிலவரம் அறிய அதனை பார்க்கலாம்.

Join SKSPREAD Telegram Channel Get Tomorrow Weather Update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top