இன்றைய செய்திகள் (06.11.2023)இன்றைய செய்திகள் (06.11.2023)

  இன்றைய செய்திகள் (06.11.2023). தமிழகம் முதல் உலகம் வரையில் இன்று நடந்த முக்கிய செய்திகள் தொகுப்பை காணலாம். இந்த செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா. அதற்க்கு எங்கள் வாட்ஸாப்ப் சானலில் இணைந்திடுங்கள். செய்திகள், வேலைவாய்ப்பு, சினிமா, சீரியல்,பிகஃபாஸ், போன்ற அணைத்தும் உடனடியாக கிடைக்கும்.

இன்றைய செய்திகள் (06.11.2023) ! தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா லீவு விட்டாச்சு ! 

இன்றைய செய்திகள் (06.11.2023)

விலை நிலவரம் :

  1. தங்கம் ஒரு சவரன் ரூ. 45,600க்கு விற்பனை.

  2. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63 டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24 என விற்பனை.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

தமிழ்நாடு :

  1. அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் நடத்திய ரெய்டில் ரூ. 10 கோடி பறிமுதல்.

  2. CASAGRAND இடங்களில் நடந்த ரெய்டில் ரூ. 500 கோடி ரசீது பறிமுதல்..

  3. அப்பாசாமி நிறுவன ரெய்டில் ரூ. 200 கோடி ரசீது பறிமுதல்.

  4. அரியலூர் மாவட்டத்தில் கரு கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி. மருத்துவர் மற்றும் உதவியாளர் கைது.

 5. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக தாமிபரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. 

  6. சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாமில் புதிய வாக்காளர்களாக 4 லட்சம் பேர்கள் விண்ணப்பம். மேலும் திருத்தம் செய்ய 6,00,112 பேர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

  7. நீட் தேர்வு ஒழிப்பு கையொழுத்து இயக்கத்தில் திருமாவளவன் , வைகோ போன்றவர்கள் கையெழுத்திட்டார்.

  8. தீபாவளி பண்டிகையை ஒட்டி 16,000 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றது. 

  9. கூட்டுறவுத்துறை பண்ணை பசுமை காய்கறி கடைகளில் இன்று முதல் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 30 என விற்பனை.    

10. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. 

11. வரும் மார்ச் மாதத்திற்குள் 30 % ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அடுத்த 9 மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த செயல்முறை நடைமுறைபடுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

11. ரூ. 10 நாணயங்களை கடைகளில் பெறவில்லை என்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை – ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை.

நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! லீவு விட்டும் சந்தோசம் இல்லை  !

இந்தியா :

  1. மகாதேவ் போன்ற 22 சூதாட்ட செயலிகளை சத்தீஷ்கர் அரசு தடை விதித்துள்ளது.

  2. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் ப.கண்ணன் காலமானார். இதனால் அரசின் சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு. 

  3. கடந்த மதம் 29ம் தேதியில் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

  4. கேரளாவில் லிசா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. தற்போது 7 பேர்கள் லிசா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  5. கர்நாடகாவில் விவசாயி என்பதால் திருமணம் செய்ய பெண் கிடைக்க 50 இளைஞர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.  

  6. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து இருப்பதால் 10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர அனைத்து மாணவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

  7. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. 

  8. நேபாளத்தில் 4.16 மணியளவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 

உலகம் :

  1. இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்தில் செட்டில் ஆகுபவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இன்றைய செய்திகள் (06.11.2023)

சினிமா :

  1. மணிரத்னம் இயக்கும் KH234 படத்தில் துல்கர் சல்மான் , ஜெயம்ரவி மற்றும் திரிஷா இணைந்து இருப்பதாக பட போஸ்டர் வெளியாகி உள்ளது.

  2. கமல் மணிரத்னம் இணையும் KH234 படத்திற்க்கு ” Thug Life ” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 

  3. நடிகர் பிரித்வி ராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

விளையாட்டு :

  1. 2023ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை தர வரிசை பட்டியலில் இந்திய அணி 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கின்றது.

  2. இன்றைய உலகக்கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றனர்.

  3. பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. 

  4. இலங்கை வீரர் மேத்யூ பேட்டிங் செய்ய மைதானத்திற்கு தாமதமாக வந்ததால் நடுவரால் அவுட் செய்யப்பட்டார். 

  5. உலகக்கோப்பை 2023 இன்றைய போட்டியில் வங்கதேசம் அணிக்கு 280 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இது போன்ற பல செய்திகளை அறிந்து கொள்ள எங்கள் பக்கத்தினை பின் தொடரவும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *