கத்திரி வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே கத்திரி வெயில் பல்ல காட்டி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே அச்சம் கொள்கிறார்கள். மேலும் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் நோய்கள் வர வாய்ப்பு இருப்பதால் அரசு அதற்கேற்ற முன்னேற்பாடுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் . மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.