வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சூரியன் சுட்டெரிக்கும் நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் தலை காட்ட கூட பயப்படுகிறார். தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெயிலின் தாக்கம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்ரவரி 28) முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி அதிகமாக இருக்கும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு இருக்கிறது. எனவே அப்பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.