
வானிலை மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும். குறிப்பாக இன்றும் நாளையும் (மார்ச் 25, 26) வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும் மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதால் கடலுக்குள் செல்ல எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளது.