சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி, மார்ச் 12 முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும். குறிப்பாக சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே இந்த வானிலை மாற்றத்தால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை இல்லை.