செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு - எந்தெந்த இடங்களில் தெரியுமா ?செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு - எந்தெந்த இடங்களில் தெரியுமா ?

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து காண்போம்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த அமைச்சகம் சார்பில் நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.அந்த வகையில் கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் – போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – உதயநிதி ஸ்டாலின் தகவல் !

அவ்வாறு திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே 22-ல் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *