புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் நாளை டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதாவது, ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் – இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!
இதனை தொடர்ந்து, விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், திருச்சி – சென்னை சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை என்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாததால், மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்