
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் அடுத்த மாதம் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் ;தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் பொது தேர்வில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் மாசிமக திருவிழா இந்த ஆண்டு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது . எனவே இதில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க நாளை தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.