தமிழ்நாட்டில் நாளை மின்தடை ( 09.11.2023 ). தமிழகத்தில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர மின் பராமரிப்பு பணியினை மாதம் ஒரு முறை செய்வர். இந்நேரத்தில் பணி நடைபெறும் பகுதிகளில் மின்தடை செய்வது வழக்கம். அதன் படி தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறைத்த விவரங்கள் இதோ.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை ( 09.11.2023 ) !
வேலூர் – பள்ளூர் துணை மின்நிலையம் :
ஆரில்பாடி , அனந்தபுரம் , புதூர் , கேசவபுரம் , சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
திருவண்ணாமலை – புன்னை துணை மின்நிலையம் :
நெமிலி , மேல்களத்தூர் , மேலேரி , காட்டுப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.
கோயம்புத்தூர் – அழகுமழை துணை மின்நிலையம் :
அழகுமழை , கரட்டுப்பாளையம் ,வழுப்புரம்மன் கோவில் , பொல்லிகாளிபாளையம்பகுதி , அமராவதி பாளையம் , பெருந்தொழுவு , நாச்சிபாளையம் , பெரியாரிப்பட்டி , மீனச்சிவலசு , கண்டியன்கோயில் , கொடுவாய் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை !
புதுக்கோட்டை – புனல்குளம் துணை மின்நிலையம் :
புனல்குளம் , குளத்தூர் , குளத்தூர்நாயக்கர்பட்டி , ஆத்தங்கரைப்பட்டி , பருக்கைவிருதி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.
நாளை புதுக்கோட்டை , கோயம்புத்தூர் , வேலூர் மற்றும் திருவண்ணாமலை பகுதியில் மின்தடை அறிவிப்பினை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. இவைகளில் சிறை நேரங்களில் மட்டும் மின்தடை பகுதிகள் மற்றும் நேரங்கள் மாற்றம் செய்யப்படலாம்.