நாளை பவர் கட் இருக்கு. மாதாந்திர பராமரிப்பு பணியானது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார வரிய பணியாளர்களைக் கொண்டு பார்க்கப்படுகின்றது. எனவே பணி நடைபெறும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மட்டும் மின்தடை செய்யப்படும். இப்படியாக நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் மற்றும் நேரம் குறித்து காணலாம்.
நாளை பவர் கட் இருக்கு (அக்டோபர் 5) ! உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க !
சென்னை – சீதளப்பாக்கம் துணை மின் நிலையம் :
சென்னை மாவட்ட சீதளப்பாக்கம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான ஆதிநாத் அவென்யூ , பாலாஜி நகர் , விஜய நகரம் , விக்னராஜபுரம் மற்றும் வேளச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.
JOIN WHATSAPP GROUP | CLICK HERE |
திருப்பூர் – மடத்துக்குளம் துணை மின் நிலையம் :
திருப்பூர் மாவட்ட மடத்துக்குளம் துணை மின்நிலையம் சார்ந்த மடத்துக்குளம் , கிருஷ்ணாபுரம் , நரசிங்கபுரம் , பாப்பான்குளம் , சோலமதேவி , வீடப்பட்டி , கணியூர் , காரத்தொழுவு , வஞ்சிபுரம் , உடையார்பாளையம் , தாமிரைபாடி , சீலநாயக்கம்பட்டி , கடத்தூர் , ஜோத்தம்பட்டி , செங்கண்டிப்புதூர் , கருப்புசாமிபுதூர் போன்ற பகுதிகளில் மின்சார வரிய பணியாளர்களை கொண்டு மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் காலை 9 மணி முதல் 4 வரையில் மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை திருப்பூர் –துணை மின் நிலையம் :
உடுமலைப்பேட்டை நகரம் , பழனி சாலை , ராகல் பாவி , ஜி.என்.பாளையம் , பி.பட்டி , , எரிப்பாளையம் , போடிப்பட்டி , காந்திநகர் – 2 , அரசு கலை கல்லூரி , பள்ளபாளையம் , குறிச்சிக்கோட்டை , புக்குளம் , சி.வி.பட்டி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.
கோயம்புத்தூர் – மதுக்கரை துணை மின் நிலையம் :
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை துணை மின் நிலையம் சார்ந்த அறிவோளிநகர் , சேரபாளையம் , மதுக்கரை , பாலத்துறை , ஏ.ஜி.பதி போன்ற இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது.
மதுரை – தேனூர் துணை மின் நிலையம் :
மதுரை மாவட்டத்தினை சேர்ந்த தேனூர் துணை மின் நிலையம் சார்ந்த கடூர் , நாமங்குளம் , புதுவேட்டைக்குடி போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !
ஈரோடு – விஜயமங்கலம் துணை மின்நிலையம் :
பெரிய வீர சங்கிலி , சின்ன வீர சங்கிலி , விஜயமங்கலம் , கைக்கோபாளையம் , வடமலை கவுண்டன்பாளையம் , பச்சகவுண்டன்பாளையம் , கினிபாளையம் , கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் போன்ற ஈரோடு மாவட்ட துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இருக்காது.
தாஞ்சாவூர் – ஊரணிபுறம் துணை மின் நிலையம் :
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான ஊரணிபுறம் , பின்னையூர் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரையில் மின்சாரம் இருக்காது.
விருதுநகர் – ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையம் :
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் , சித்தலம்புத்தூர் , குட்டதட்டி , வெங்கடேஸ்வரபுரம் போன்ற பகுதிகளில் நாளை மின்சார வறிய பணியாளர்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது.
காரியாபட்டி துணை மின் நிலையம் – விருதுநகர் :
கல்லுப்பட்டி , காரியாபட்டி , மந்திரியோடை , மற்றும் பாப்பனம் சுற்றியுள்ள பகுதிகளில் விருதுநகர் மாவட்டம் சார்ந்த காரியாபட்டி துணை மின் நிலையம் பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் வரிய பணியாளர் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருக்கின்றனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின் வாரியம் சார்பில் வெளியாகி உள்ளது. இவைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.