
மதுரையில் இந்த பகுதியில் நாளை மின்தடை
மதுரையில் இந்த பகுதியில் நாளை மின்தடை: தமிழகத்தில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்வதற்காக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் இந்த பகுதிகளுக்கு நாளை மின்தடை செய்ய இருப்பதாக மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மதுரை வடக்கு மாவட்ட மின்வாரிய உட் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், திருமங்கலம் ரயில்வே பீடர் ரோடு, ஆனந்தா தியேட்டர் பகுதி, கீழ பள்ளிவாசல் தெரு, கற்பக நகர், விமான நிலைய ரோடு, ஆறுமுக நகர் வடபகுதி, வடகரை, பயோனியர் காலனி, பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.