குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் விடுமுறை தினங்களை வீடுகளில் வைத்து செலவிடாமல் குடும்பத்துடன் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதிக்கு சென்று செலவிடலாம் என்ற ஆசை அதிகம். அதிலும் கடற்கரை பகுதிகள் என்றால் அனைவரும் விரும்பும் ஒரு இடமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இருக்கின்ற குறைந்த செலவில் பயணிக்க கூடிய தமிழகத்தில் 5 முக்கிய கடற்கரை சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 5 முக்கிய கடற்கரை சுற்றுலா தலங்கள்
கடற்கரை சுற்றுலா தலங்கள் :
1. பூம்புகார் கடற்கரை
2. தனுசுகோடி கடற்கரை
3. மாமல்லபுரம் கடற்கரை
4. கன்னியாகுமரி கடற்கரை
5. மெரினா கடற்கரை
1. பூம்புகார் கடற்கரை :
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை சொல்லும் நகரங்களில் ஒன்றாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூம்புகார் கடற்கரை அமைந்துள்ளது. சோழர்களின் ஆட்சி காலத்தில் தலைநகரமாக பூம்புகார் இருந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் பூம்புகார் பகுதி ” காவேரி பூம்பட்டினம் என்று அழைக்கப்படுகின்றது.
ஐம்பெரும் காப்பிப்பியங்களில் ஒன்றாக இருக்கும் சிலப்பதிகாரத்தின் நாயகி ” கண்ணகி ” பிறந்த ஊர் பூம்புகார் நகரம். மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு பூம்புகார் கடற்கரை நீண்டுருக்கின்றது. முன்னொரு காலத்தில் வியாபாரத்தில் சிறந்து இருந்த காவேரி பூம்பட்டினம் நகரம் தற்போது சிறந்த கடற்கரை சுற்றுலா தலமாக இருக்கின்றது.
பூம்புகார் கடற்கரை பகுதியில் கற்பின் நாயகிக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் ” கண்ணகி சிலை ” வைக்கப்பட்டு உள்ளது. பூம்புகார் கடற்கரையின் முக்கிய திருவிழாவாக சித்திரை பௌவுர்ணமி கொண்டாடப்படுகின்றது. பழமையான துறைமுக நகரமாக இருந்த பூம்புகார் கடற்கரை குடும்பத்துடன் பார்த்து இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற இடமாக இருக்கின்றது.
சுற்றுலா பகுதிகள் :
1. சிலப்பதிகார கலைக்கூடம்
2. கல் தூண்
3. கலங்கரை விளக்கம்
4. இளஞ்சி மன்றம்
5. பூங்கா
பூம்புகார் எங்கிருக்கின்றது :
மயிலாடுதுறை பகுதியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. மதுரையில் இருந்து 305 கிலோ மீட்டர் துரத்திலும் சென்னையில் இருந்து 261 கிலோ மீட்டர் தொலைவிலும் திருநெல்வேலி பகுதியில் இருந்து 425 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கின்றது. கார் , பேருந்து , வேன் போன்ற வாகனங்ளையும் தனியார் மற்றும் அரசு பேரூந்துகளையும் பயன்படுத்தி பூம்புகார் செல்ல முடியும்.
2. தனுஷ்கோடி கடற்கரை :
தமிழ்நாட்டின் தென் கிழக்கு கடற்கரையில் பாம்பன் தீவில் அமைந்துள்ளது. இலங்கை நாட்டின் தலைநகருக்கு 27 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கின்றது. தனுஷ்கோடி பகுதி முன்னொரு காலத்தில் கோவில் , பேருந்து நிலையம் , தேவாலயம் போன்ற அனைத்து வசதிகள் நிறைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பகுதி தான். ஆனால் 1964ல் ஏற்பட்ட புயலின் காரணமாக தனுஷ்கோடி பகுதி மக்கள் வாழ தகுதி இல்லாத இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது. தற்போது தனுஷ்கோடி சிறந்த பாதுகாப்பான சுற்றுலா தலமாக இருக்கின்றது. இந்து சமய மக்கள் சொல்லும் புனித இடமாக ராமேஸ்வரம் கோவில் அமைந்து ஆன்மிக தலமாக இருந்தாலும் தனுஷ் கோடி கடற்கரை அனைவரும் விரும்பும் இடமாக இருக்கின்றது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட கிளிக் செய்யவும்
சுற்றுலா பகுதிகள் :
1. தனுஷ்கோடி சிவன் கோவில்
2. பாம்பன் பாலம்
3. அரியமான் கடற்கரை
4. ஏர்வாடி தர்க்கா
அமைவிடம் :
ராமேஸ்வரத்தில் இருந்து எளிதில் தனுஷ்கோடி கடற்கரை அமைந்துள்ளது. மதுரை , திருச்சி , சென்னை , திருநெல்வேலி , தூத்துக்குடி போன்ற அனைத்து பகுதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் இருக்கின்றது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் வசதியும் இருக்கின்றது.
3. மாமல்லபுரம் கடற்கரை :
1. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 1984ம் ஆண்டு அறிவிக்கப்பெற்ற சிறப்பினை உடையது மாமல்லபுரம். ராஜா நரசிம்மவர்மன் என்னும் மன்னரால் மாமல்லபுரம் என்று பெயர் சுட்டப்பெற்ற சிறப்பினை உடையது. 7ம் நூற்றாண்டுகளில் பல்லவ மன்னர்களின் தலைநகரமாக துறைமுகமாகவும் இருந்துள்ளது.
2. இங்கிருக்கும் கடற்கரை கோவில் கி.பி 700 – 728 ஆண்டுகளில் கிரானைட் கற்கள் கொண்டு கட்டப்பட்டது. தமிழகத்தின் முதல் கட்டுமான கோவிலாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அமைந்துள்ளது. உள்நாட்டு மக்கள் தவிர்த்து வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து வியந்து பார்க்கும் அழகிய கடற்கரை ஆக மாமல்லபுரம் அமைந்துள்ளது.
சுற்றுலா தலங்கள் :
1. கடற்கரை கோவில்
2. புலிக்குகை
3. ஒற்றைக்கல் யானை
4. அர்ச்சுனன் தபசு
5. பஞ்சபாண்டவர் ரதம்
6. கண்ணனின் வெண்ணெய் பந்து
7. கலங்கரை விளக்கம்
8. திருக்கடல் மல்லை
9. குகைக்கோயில்
10. கலங்கரை விளக்கம்
எப்படி செல்ல வேண்டும் :
சென்னையில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 96 கிலோமீட்டர் தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு , தாம்பரம் மற்றும் சென்ட்ரல் பேருந்து நிலையங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வசதிகள் இருக்கின்றது.
ஹோட்டலுக்கு சாப்ட போறீங்களா ! இனி இதுலாம் Hotel – ல செய்யாதீங்க !
4. கன்னியாகுமரி கடற்கரை :
இந்தியாவின் தெற்க்கே வங்கக்கடல் , இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி கடற்கரை அமைந்துள்ளது. குறிஞ்சி , முல்லை , மருதம் மற்றும் நெய்தல் போன்ற நான்கு வகை நிலங்களையும் கொண்ட சிறப்பு மிக்க நகரமாக கன்னியாகுமரி இருக்கின்றது. வணிகத்திற்கு சிறந்த இடமாக இருந்துள்ளது. இங்கிருக்கும் பகவதி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு மிக்க கோவிலாக இருக்கின்றது. சூரியன் உதிப்பது சூரியன் மறையும் காட்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவதுண்டு.
சுற்றுலா தலங்கள் :
1. விவேகானந்தர் பாறை
2. மகாத்மா காந்தி மண்டபம்
3. திருவள்ளுவர் சிலை
4. காமராஜர் மண்டபம்
5. திற்பரப்பு அருவி
6. தொட்டிப்பாலம்
7. பத்மநாபுரம் அரண்மனை
8. முட்டம் கடற்கரை
9. சங்குத்துறை கடற்கரை
எங்கிருக்கின்றது :
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி பகுதி மதுரையில் இருந்து 253 கிலோ மீட்டர் தூரத்திலும் திருநெல்வேலி பகுதியில் இருந்து 85 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னை பகுதியில் இருந்து 738 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கின்றது.
5. மெரினா கடற்கரை :
இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரபலமான நகரில் அமைந்திருக்கின்றது சென்னை மெரினா கடற்கரை. சுமார் 13 கிலோ மீட்டர் நீளம் கொண்டு உலகின் இரண்டாவது நீளமான கடற்கரைகளில் ஒன்றாக விளங்குகின்றது. கடற்கரையின் மற்றொரு சிறப்பு கடற்கரையின் அருகில் அமைந்திருக்கும் காந்தி சிலை , கண்ணகி சிலை , காமராஜர் சிலை மற்றும் முன்னாள் முதல்வர்களான அண்ணா நினைவிடம் , எம்.ஜி.ஆர் நினைவிடம் , ஜே.ஜெயலலிதா நினைவிடம் , மு.கருணாநிதி போன்றவர்களின் நினைவிடம் அமைந்திருக்கின்றது. சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் இங்கு அதிகமாகத்தான் இருக்கும்.
சுற்றுலா தலங்கள் :
1. கலங்கரை விளக்கம்
2. புனித ஜார்ஜ் கோட்டை
3. வடபழனி
4. கிண்டி பாம்பு பண்ணை
5. சிறுவர் பூங்கா
6. கிஷ்கிந்தா
7. குயின்ஸ் லேன்ட்
8. வண்டலூர் பூங்கா
9. சம்தோம் சர்ச்
10. திருவேற்காடு இன்னும் பல சுற்றுலா தலங்களை சென்னை கொண்டுள்ளது.
தமிழகத்தில் 5 முக்கிய கடற்கரை சுற்றுலா தலங்கள்
அமைவிடம் :
உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து சென்னை வருவதர்க்கு விமான போக்குவரத்து இருக்கின்றது. அதே போல் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சென்னை வருவதற்கு பேருந்து மற்றும் ரயில் வசதி இருக்கின்றது. சென்னையில் இருக்கும் சுற்றுலா தலங்களை அரசு மற்றும் தனியார் பேருந்து , மெட்ரோ அல்லது ஆட்டோ மூலம் பயணம் செய்யலாம்.