வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ - அப்ப குக் வித் கோமாளியோட கதி என்ன?வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ - அப்ப குக் வித் கோமாளியோட கதி என்ன?

வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ: விஜய் டிவியில் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 நேற்று முன்தினம் தொடங்கி சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் நடுவராக இருந்து வெங்கடேஷ் பட் திடீரென விலகுவதாக அறிவித்தார். மேலும் பிரபல சேனலில் ஒரு சமையல் ஷோவுக்கு போவதாக முன்னரே தெரிவித்தார். இந்நிலையில் மீடியா மேசன்ஸ் நிறுவனமும் சன் தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரிக்கும் ‘டாப் குக் டூப் குக்கு’ என்ற புதிய சமையல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை நேற்று வெளியிட்டுள்ளது.

வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ

இந்த நிகழ்ச்சியில் தான் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். மேலும் இந்த ஷோவில் டூப் குக்குகளாக ஜிபி முத்து, சீரியல் நடிகை தீபா, சூப்பர் சிங்கர் பரத், மோனிஷா, தீனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஷோ அப்படியே குக் வித் கோமாளி ஜெராக்ஸ் மாதிரி இருந்தாலும், கண்டிப்பாக இந்த ஷோ குக் வித் கோமாளிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு சேனல்களும் டிஆர்பியும் எகிற போகிறது. இருப்பினும் யார் டிஆர்பியில் முதலாவதாக வர போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *