கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5  தமிழ் வெப் சீரிஸ்கள் - கிச்சா பண்ண தில்லாலங்கடி வேலைகள்!கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5  தமிழ் வெப் சீரிஸ்கள் - கிச்சா பண்ண தில்லாலங்கடி வேலைகள்!

டாப் 5 தமிழ் வெப் சீரிஸ்: இன்றைய சினிமாவில் அடுத்தடுத்த மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. முதலில் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த நம்முள் பலர், எப்போது புது படம் ஓடிடியில் வெளியாகும் என்று காத்து கொண்டிருக்கின்றனர்.

அதற்காக சில இயக்குனர்கள் படம் இயக்குவதை விட்டுவிட்டு வெப் சீரிஸ் இயக்க தொடங்கிவிட்டனர். அப்படி தமிழ் சினிமாவில் வெளியான வெப் சீரிஸில் நம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. டாப் 5 தமிழ் வெப் சீரிஸ்

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ் தான் விலங்கு. கிச்சா என்ற நபர் செய்த கொலைகளை போலீஸ் அதிகாரியாக விமல் எப்படி கண்டு பிடிப்பார் என்பதை விறுவிறுப்பான கட்டத்தில் காட்டியிருப்பார்கள்.

மேலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விமலுக்கு இந்த தொடர் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பார்த்திபன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான வெப் சீரிஸ் தான் சுழல். 18 வது கூட ஆகாத ஒரு இளம் பெண் காணாமல் போனதை தொடர்ந்து, அதை கண்டுபிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் வேலைகளும், போலீஸ் நடத்திய விசாரணை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை தான் இது.

எஸ் ஜே சூர்யா நடிப்பில்  8 எபிசோடுகளாக வெளியான வெப் சீரிஸ் தான் வதந்தி. ஒரு இளம்பெண் மர்மமான முறையில் இறந்து விடுகிறாள்.

அவளை யார் கொலை செய்தது என்பதை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருப்பார்கள். இதில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய சிறந்த நடிப்பால் இந்த கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் அரசியலில் நடக்கும் ஊழல் பற்றிய விறுவிறுப்பாக காட்டி இருந்த தொடர் தான் தலைமை செயலகம்.

இந்த தொடர் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் முதலமைச்சரின் ஊழல் மற்றும் ஒரு கொலை வழக்கை கண்டுபிடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைக்கதை இது.

Also Read: “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் அம்மனாக நடிக்க போவது யார்? – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக வீரப்பனை என்னும் கிராமத்தில் பெண்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். அதுமட்டுமின்றி நிறைய சம்பிரதாயங்களில் பெண்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த அடக்குமுறை எல்லாம் தாண்டி தமிழ்ச்செல்வி என்னும் பெண் டாக்டர் ஆகும் கனவை நோக்கி எப்படி நகர்கிறார் என்பது தான் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *