ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து. பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்திலிருந்து 64 பேர் மதுரா மற்றும் பிருந்தாவன் கோயில்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த பொது ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலை அருகில் புனித சுற்றுலா சென்ற பயணிகளின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஹரியானா பேருந்து தீ விபத்து :
இவ்வாறு பேருந்து தீப்பிடித்து எரிந்த இந்த விபத்தில்10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள ஊள்ளூர் மக்கள் பேருந்து தீப்பற்றி எரிவதை பார்த்துவிட்டு பேருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதனை பேருந்து ஓட்டுநர் கவனிக்காமல் பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் – மருத்துவர் சஸ்பெண்ட்!!
அதன் பின்னர் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேருந்தை பைக்கில் பின்தொடர்ந்து சென்று அந்த பேருந்தை நிறுத்தியுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . இந்நிலையில் உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிஜரானியா தெரிவித்துள்ளார்.