கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு செல்ல தடை :
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆகாய கங்கை நீர்விழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி புளியஞ்சோலை போன்ற அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கலாநிதி அறிவிப்பு.
குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !
மேலும் நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுவன் நீரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிழழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.