நேற்று நோ பார்க்கிங், இன்று சீட் பெல்ட் - அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்நேற்று நோ பார்க்கிங், இன்று சீட் பெல்ட் - அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவல்துறை அதிகாரிக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

காவல்துறையினர் பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசாருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை – பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கருத்து !

நோ பார்க்கிங் பகுதிகளில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு நேற்று போலீசார் அபராதம் விதித்த நிலையில், இன்று வள்ளியூரில் அரசு பேருந்தில் சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி 3 ஓட்டுநர்களுக்கு தலா ரூ.500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *