வாகன ஓட்டிகளே உஷார்
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. எனவே சாலை விபத்துகளை குறைப்பதை குறித்து அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் அரசு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவித்தது. மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தெரிவித்தது. இருப்பினும் மக்கள் சிலர் விதிமுறைகளை நிராகரித்து வருகின்றனர். இந்நிலையில் இது மாதிரி நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பொதுவாக ஹெல்மெட் சிலர் அணிந்திருந்தாலும் அதை சரியாக அணியாமல் இருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் முதலில் ஹெல்மெட் தான் கழன்று கீழே விழுகிறது. இதனால் தான் உயிர் போகும் அளவுக்கு செல்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு, இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும், சரியாக பெல்ட் போட்டு லாக் செய்யாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி காவல்துறை சோதனை செய்யும் பொழுது ஹெல்மெட் போடுவது மட்டுமின்றி அதன் பெல்ட்டை சரியாக லாக் செய்ய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் இனி ரூ.2000 பைன் செலுத்த வேண்டி வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம், சாலை விபத்துகளில் உயிர் பலி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.