TET தேர்வாணையம் தகுதியுள்ள ஆசிரியர்களை வருடந்தோறும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை TET என்ற தேர்வின் மூலம் நிரப்பி வருகிறது. இதற்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த வருடத்திற்கான TET தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்
அதுமட்டுமின்றி அரசு மற்றும் அரசு சார்ந்த அறிவியல் கலை கல்லுரியில் உள்ள 4000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். அதே போல 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.