தற்போது தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை எளிதான, சற்று கடினமான மற்றும் கடினமான மலையேற்ற பகுதிகளாக வகைப்படுத்தி, நீங்கள் உங்கள் மலையேற்ற அனுபவத்தைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சுற்றுலா துறை :
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் அதற்கான அறிவிப்பினையும் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. Trek Tamilnadu official Scheme 2024
இதன் அடிப்படையில் அறிவிப்பின் படி ட்ரெக்கிங் அதாவது மலையேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்காகவே தமிழகம் முழுவதும் உள்ள 40 மலையேற்ற இடங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்ள இணையதளத்தையும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் இது ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் இணைய www.trektamilnadu.com என்ற இணையதளத்தையும் அமைச்சர் உதயநிதி அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யும் முறை :
அந்த வங்கியில் மலையேற விரும்பும் சுற்றுலா பயணிகள், தமிழ்நாடு அரசின் பிரத்யேக மலையேற்ற தளமான TrekTamilnadu.com-ல் பதிவு செய்து கொண்டு உரிய அனுமதிகளை பெற்று,
பழங்குடியின மற்றும் மலைவாழ் கிராமங்களில் உள்ள பயிற்சி பெற்ற இளைஞர்களின் உதவியுடன் மலையேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் – தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
தற்போது இந்த பணிகளுக்கு முதற்கட்டமாக சுமார் 300 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மலையேற்ற இணையதளத்தில், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்கி கணக்கு துவங்க வேண்டும்.
அதன் பிறகு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை எளிதான, சற்று கடினமான மற்றும் கடினமான மலையேற்ற பகுதிகளாக வகைப்படுத்தி, நீங்கள் உங்கள் மலையேற்ற அனுபவத்தைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.