Home » செய்திகள் » 2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் – 22 ஆண்டுகளுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு!!

2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் – 22 ஆண்டுகளுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு!!

2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் - 22 ஆண்டுகளுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு!!

Breaking News: 2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர்: பொதுவாக மலை பகுதிகளில் ட்ரக்கிங் செல்வது பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். குறிப்பாக பனி மலைகளில் உச்சி வரை ஏறி தங்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொடி நடும் வழக்கத்தை பழக்கமாக வைத்துள்ளனர். வழியில் எந்த ஒரு இடையூறு ஏற்பட்டாலும் கூட தாங்கள் எடுத்து வைத்த முயற்சியை கை விடாமல் கடைசி வரை போராடி சில வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீரரான வில்லியம் ஸ்டாம்பிள் என்பவர் தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹஸ்கரான்’ மலையில் ஏறியுள்ளார். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக அவர் மாயமானார்.

எங்கும் தேடியும் அவரது உடல் கிடைக்காததால், அப்போது தேடுதல் பணியும் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அரங்கேறி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் அவருடைய உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் – சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை!

அதாவது, 22 ஆண்டுகளுக்கு முன்பு பனிச்சரிவில் சிக்கிய வில்லியம் ஸ்டாம்பிள் என்பவரின் உடல் ஹஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2002ல் அவர் உடுத்தி இருந்த துணி, கருவிகள் உட்பட பனியில் உறைந்து போய் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பையில் இருந்த பாஸ்போர்ட் மூலமாக தான் அவரை போலீஸ் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top