Home » செய்திகள் » சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு !

சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு !

சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் - திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு !

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதேசமயம் சமூக வலைத்தள பக்கங்களில் சிலர் தன்னையும் மற்றும் எனது குடும்பத்தினரையும் விமர்சித்து வருவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் புகாரும் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான் சார்பில் விளக்க நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு – பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும், தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் ஆபாசமாக மற்றும் அவதூறு கருத்துக்களை பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்திருக்கும் விஷமிகளையும் நீதி மன்றத்தில் நிறுத்துவேன் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top