திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு விவகாரம் இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நிலநடுக்கம்:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!! முழு விவரம் உள்ளே!!
அந்த நிலச்சரிவில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மிக முக்கிய மாவட்டம் ஒன்றில் தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!
அதாவது, தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் புத்தாநத்தம் என்ற பகுதியில் அதிக சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் சுமார் 5 வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்த வீடுகளில் பாத்திரங்கள், கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் குலுங்கி கீழே விழுந்தது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி: சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!
மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் – முழு தகவல் இதோ !
டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!