தற்போது திருச்சி பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இதனையடுத்து என்ஜினில் கரும் புகை வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி பயணிகள் ரயிலில் தீ விபத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருச்சி :
திருச்சியில் பயணிகள் ரயிலில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்த வகையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் 0688 என்ற எண் கொண்ட பயணிகள் ரயில் இன்று காலை 8:25 மணிக்கு புறப்பட்டு சுமார் 9 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த சமயத்தில் திடீரென என்ஜினில் இருந்து கரும் புகை வெளியேற ஆரம்பித்தது.
ரயில்வே போலீசார் விசாரணை :
இதனை தொடர்ந்து என்ஜினில் கரும் புகை அதிகமாக வெளியேறியது அங்கிருந்த பயணிகள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் என்ஜின் பகுதியில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர் உடனடியாக என்ஜின் பகுதியில் இருந்து வெளியே இறங்கியதோடு ரயிலில்பயணித்த மற்ற பயணிகளை வெளியேறும்படி அறிவுறுத்தினார். அந்த வகையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் – ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !
இதனையடுத்து பாசஞ்சர் ரயில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் அதேவழியாக வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரயில் என்ஜின் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.