
திருச்சியில் மூட்டை மூட்டையாக ஆறு வகையான போதைப்பொருள் பறிமுதல்: தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகமாக உலா வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாமண்டபம் மாம்பழச்சாலை பகுதியில் போதை பொருட்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேலு தலைமையிலான அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கிய நிலையில் அதிரடி சோதனை நடத்தினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது அந்த பகுதியில் மூட்டை மூட்டையாக போதைப் பொருட்கள் வாங்கி வைத்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. அதை அனைத்தையும், காவல்துறை பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக அதில்,” கூலிப், கான்ஸ் உள்ளிட்ட ஆறு வகையான போதை பொருட்கள் அந்த மூட்டையில் அம்மா மண்டபத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் மூட்டை மூட்டையாக ஆறு வகையான போதைப்பொருள் பறிமுதல்