திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு  - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு  - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

Breaking News: திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு: திரிபுராவில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கிடையே சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது திரிபுரா பகுதியில் இருக்கும்  220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அதிரடி சோதனை நடத்தியது. அதாவது அங்கு படிக்கும் மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 828 மாணவர்களுக்கு HIV தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில்  47 மாணவர்கள் உயிரிழந்து விட்டனர். எப்படி மாணவர்களுக்கு தொற்று பரவியது என்பது குறித்து விசாரணை செய்யப்பட நிலையில்,  இவர்களுக்கு போதை பழக்கம் அதிகம் இருந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர்.

Also Read: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும்? முழு அப்டேட் இதோ!!

அதனால்தான் அனைவருக்கும் HIV தொற்று பரவியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து மாணவர்கள் படிக்க சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த மாணவர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. hiv news – aids news – india latest news update – students infected with hiv – school and colleges students

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *