விஜய்யின் GOAT படத்தில் இணைந்த திருமணம் ஆகாத 40 வயது நடிகை.., தளபதியோட 6வது முறையா?.., யார் தெரியுமா?விஜய்யின் GOAT படத்தில் இணைந்த திருமணம் ஆகாத 40 வயது நடிகை.., தளபதியோட 6வது முறையா?.., யார் தெரியுமா?

விஜய்யின் GOAT

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருந்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 650 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். தற்போது படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு படக்குழு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடித்து வரும் நிலையில், இப்பொழுது மேலும் திருமணமாகாத பிரபல நடிகை படத்தில் இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி மற்றும் லியோ படங்களில் ஜோடியாக நடித்த நடிகை திரிஷா தான் கோட் படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. 6 வது முறையாக விஜய்யுடன் திரிஷா நடிக்க இருப்பதால் கோட் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடக்கடவுளே.., தேவி ஸ்ரீ பிரசாத்க்கு என்ன தான் ஆச்சு?.., ஆளு இப்படி ஆயிட்டாரே?.., ஷாக்கிங் போட்டோ உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *