திரிஷாவின் Ex – லவ்வருடன் டேட்டிங் செய்யும் சிவகார்த்திகேயன் பட நடிகை? தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் திரிஷா. தற்போது இவர் நடிப்பில் Thug life”, “விடாமுயற்சி”, “விஸ்வம்பரா” என அடுத்தடுத்து படங்கள் உருவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் “GOAT” படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் சிறந்து விளங்கி வரும் அவருக்கு 40 வயதை எட்டியும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு வருண் மணியன் என்பவரை காதலித்து அவர்களது உறவு நிச்சயதார்த்தம் வரை சென்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால், சில காரணத்தால் அந்த உறவு பாதியில் முடிவடைந்தது. அதன்பின்னர் திரிஷா பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் அவை எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில் திரிஷாவின் முன்னாள் காதலனான வருண் மணியன் தமிழ் நடிகையான பிந்து மாதவியுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை. தற்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.