தென்னிந்திய தமிழ் சினிமாவில் உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா:
கோலிவுட்டில் டாப் 5 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, விடாமுயற்சி திரைப்படங்கள் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி படத்திலும், கமலின் தக் லைஃப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா நடித்த ஒரு திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வெளியான திரைப்படம் அத்தடு.
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், பிரகாஷ்ராஜ், சோனு சூட், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2005ல் வெளியான இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான திரைப்படம் என்ற சாதனையை அத்தடு படைத்துள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகி உள்ளது. உலகளவில் எந்த திரைப்படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?
வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!
ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ!!
நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!