கூவத்தூர் சர்ச்சை விவகாரம்
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜு சமீபத்தில் த்ரிஷாவை குறித்து அவதூறாக பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது அதில் அவர், கூவத்தூரில் எம் எல் ஏ-கள் தங்கியிருந்த நிலையில் அப்போது அவர்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்தனர். குறிப்பாக நடிகைளை நடிகர் கருணாஸ் தான் அழைத்து வந்தார் என்று, அதில் ஒரு நடிகை திரிஷா என்றும் தெரிவித்தார். இதுகுறித்து திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், ஏ.கே.ராஜு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இருப்பினும் அதில் மனம் இறங்காத திரிஷா தற்போது ஏ.கே.ராஜு வுக்கு ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்த நோட்டீஸ் அவரிடம் சேர்ந்த 24 மணி நேரத்தில் பொதுவெளியில் என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் அவர் மன்னிப்பு கேட்ட விளம்பரம் பெரிதாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி மேலும் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல் உள்ளிட்ட ஊடகங்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.