பிரபல யூட்யூபர் TTFவாசனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. விபத்தின் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். மேலும் இவரின் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது TTF வாசன் நலமுடன் இருக்கின்றார் என்றும் தனக்கு நடந்தது இது தான் என்று அவரே கூறி இருக்கின்றார். TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்
TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்
யார் இந்த TTF வாசன் :
2K கிட்ஸ்கள் கொண்டாடும் பிரபல யூட்யூபர் TTF வாசன். இவர் விலை உயர்ந்த பைக் பயன்படுத்தி வாகனம் இயக்கி , பிறருக்கு உதவி செய்து வீடியோ எடுத்து பதிவிட்டதில் பிரபலமானவர். இன்ஸ்ட்ராகிராம் மற்றும் யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரை பின்பற்றுபவர்கள் மட்டும் மில்லியன் நபர்களுக்கும் மேல். பைக்கில் சென்று வீடியோக்கள் எடுத்து பதிவிட்டாலும் அவ்வப்போது போலீஸ் வசம் சிக்கிக்கொண்டு கைதும் செய்யப்பட்டு இருக்கின்றார். மஞ்சள் வீரன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார்.
விபத்தில் சிக்கிய TTF வாசன் :
இவர் கோவையை சொந்த ஊராகக் கொண்டவர். எனவே தனது நண்பர்களுடன் மஹாராஷ்ரா நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர்களுடன் பயணித்து வந்துள்ளார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் வந்து கொண்டிருந்த பொது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தின் காரணமாக கை உடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.
நிபா வைரஸ் பரவல் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் மருந்து ! மீண்டும் லாக்டவுன் !
விபத்தில் சிக்கிய பைக் :
சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டு கை மணிக்கட்டில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தின் போது இவர் ‘Suzuki Hayabusa ‘ வாகனத்தினை தான் இயக்கி கொண்டு வந்துள்ளார். 250 முதல் 300 கிலோ எடை கொண்டது. இந்த வாகனத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 300 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும். இந்த வாகனத்தின் விலை சுமார் 16 லட்சத்திற்கும் மேல். அதிக வேகத்தில் பயணிக்க கூடிய வாகனம் தான் ஆனால் நம்முடைய சாலைகளில் பயணிக்க ஏதுவான வாகனம் கிடையாது என்பது போக்குவரத்து காவலர்களின் கருத்தாக இருக்கின்றது. இந்த வாகனம் இயக்கி விபத்து ஏற்படும் போது உயிரிழப்புகள் ஏற்படுவது ஏற்கனவே நடந்துள்ளது. ஆனால் TTF வாசன் கை முறியுடன் உயிரிழப்பில் இருந்து தப்பித்து உள்ளார்.
காவல் துறையினர் வழக்கு பதிவு :
காஞ்சிபுரம் சாலையில் அதிவேகத்தில் சென்று வீலிங் செய்த பொது விபத்தில் சிக்கிய TTF வாசனை காவல்துறையினர் கைது செய்தனர். இவரின் வாகன உரிமமும் தற்காலியமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. காவல் துறையினர் கைதிகள் இருந்து ஜாமீன் பெறுவதற்கு நீதிமன்றத்தில் மனு அனுப்பி இருந்தனர். ஆனால் நீதிபதி TTF வாசன் தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
வீலிங் செய்தாரா TTF வாசன் :
இவர் அதிக வேகத்துடன் பயணித்து வீலிங் செய்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது என்பது போன்றெல்லாம் பல விமர்சங்கள் TTF வாசன் மேல் எழுந்த வண்ணமே இருந்தது. ஆனால் நான் நலமாக இருக்கின்றேன் , விபத்திற்கு காரணம் இது தான் என்று அவரே வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
விபத்திற்கு காரணம் என்ன :
TTF வாசன் கூறியது ‘ விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மயக்கம் வருவது போல் உணர்வு இருந்துள்ளது. உணவு சாப்பிடாமல் டீ மட்டுமே சாப்பிட்டு வாகனம் இயக்கியதன் காரணமாகவே மயக்கம் ஏற்பட்டுள்ளது. தெரியாமல் Twist செய்ததன் காரணமாகவே பைக் தூக்கி உள்ளது. அதிக வேகத்தில் போகவில்லை. வீலிங் செய்யவும் இல்லை. அதிக வேகத்தில் செல்லும் போது வீலிங் செய்ய முடியாது. நான் நலமாக இருக்கின்றேன் ‘ என்று அவரே கூறியுள்ளார்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்
விபத்தில் தப்பிப்பதற்கான காரணம் :
வாகனம் இயக்கம் போது முதுகெலும்பின் பாதுகாப்பிற்கு என்று விலை உயர்ந்த ரைடிங் கேஸ் பயன்படுத்தியதன் காரணமாகவே விபத்தில் உயிர் தப்பித்தேன் என்று அவரே கூறியிருந்தார்.
TTF வாசன் ஹெல்மெட் விலை :
விபத்தில் சிக்கிய TTF வாசன் பயன்படுத்தும் ஹெல்மெட்டின் விலை மட்டும் சுமார் ரூ. 1.5 லட்சம். இந்த ஹெல்மெட் வெளிநாட்டில் இருந்து ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெறாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு பயன்படுத்து உள்ளார். இதனால் அடுத்தடுத்த குற்றங்களில் சிக்கி வருகின்றார் TTF வாசன்.
விலை உயர்ந்த பைக் , ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வாகனம் இயக்கி உள்ளார். ஆனால் சாலையில் பயணிக்க பொருத்தம் இல்லாத வாகனத்தினை பயன்படுத்தியது தான் விபத்திற்க்கான காரணம் என்று காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் TTF வாசன் திடீரென்று மயக்கம் ஏற்பட்டததால் தான் விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ளனர். காவல் துறையின் கண்காணிப்பில் கீழ் இருக்கும் இவர் முழுமையான விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் அறிய வரும்.