TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா. கடந்த மாதத்தில் பைக்கை அதிக வேகமாக இயக்கிய TTF வாசன் விபத்தில் சிக்கினார். இதே போல் பல சாலை விபத்துகளை சந்தித்து உள்ளார். எனவே இவரின் வாகனம் ஓடுவதற்கான உரிமத்தினை 10 ஆண்டுகள் ரத்து செய்துள்ளது போக்குவரத்து துறை.
TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து !
பைக் சாகசம் :
விலை உயர்ந்த பைக் வைத்துக்கொண்டு அதிக வேகத்தில் வாகனம் ஒட்டி சாகசம் செய்வார். அதனை விடியோவாகவும் பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆதலால் இவருக்கு பைக் ரசிகர்கள் அதிகம். அதிக வேகத்தில் பைக் ஒட்டி பல விபத்துகளை ஏற்படுத்தி இருக்கின்றார். இதனால் இவரின் மேல் காவல் துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
JOIN WHATSAPP | CLICK HERE |
வீலிங் செய்ததால் வந்த வினை :
கடந்த மாதம் சுஸுகி ஹயபுசா என்னும் விலை உயர்ந்த வாகனத்தில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். அதிக வேகமாக செல்லும் போது வீலிங் செய்ய முயற்சித்து உள்ளார்.
இதனால் பைக் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. சிறு காயங்களுடன் TTF வாசன் உயிர் தப்பினர். அதிவேகமாக பைக் இயக்கி விபத்து ஏற்படுத்தியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம்
ஓட்டுநர் உரிமம் ரத்து :
சாலைகளில் அதிக வேகமாக பயணித்து விபத்துகளை ஏற்படுத்தி வந்த TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்தனர். இந்நிலையில் TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதாவது தற்போது முதல் 2033ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று ஆரம்பித்த இவரின் பைக் பயணம் தற்போது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நிலையில் இருக்கின்றது. அதிக வேகமாக செல்லும் வாகனமாக இருந்தாலும் சாலை விதி முறைகளை பின்பற்றி இருந்தால் இது போன்ற விபத்துகளை தடுக்கலாம். TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பது அதிக வேகத்தில் வாகனம் ஓட்டும் பலருக்கும் படமாக இருக்க வேண்டும்.