Home » செய்திகள் » சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு - பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

பழம்பெரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடா தனது 86வது வயதில் மறைவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்ம விருது:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்ன மரம் நட வேண்டும் என்ற வார்த்தையை மனதில் ஏற்றி சாகும் வரை மரம் நட்டவர் தான் விவேக். அவரை போல் சிறு வயதில் இருந்து மரம் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தவர் தான் துளசி கவுடா. அவர் குழந்தையாக இருக்கும் பொழுது, மரங்களை நட வேண்டும் என்று ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். அதன்படி, ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட பெருமைக்குரியவராக திகழ்ந்தவர்.

இப்பொழுது அவர் நட்ட மரங்கள் பல பல ஆண்டுகளாக உயரமாக வளர்ந்துள்ளன. இதனால் அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷா மித்ரா விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் உத்தர கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஹலக்கி சமூகத்தைச் சேர்ந்த இவரை, தாவரங்களின் கலைக்களஞ்சியம் என்று அழைத்தனர். இந்நிலையில் நேற்று அவர் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்கின் ஹொன்னாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரின் உயிர் பிரிந்தது என்று தகவல் வெளியாகியது.

அதாவது, துளசி கவுடா கடந்த சில மாதங்களாக  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், படுக்கையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது..இது அனைவரது மத்தியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரின் இறப்பு குறித்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  – வெளியான ஷாக்கிங் தகவல்!!

2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top