Home » சினிமா » டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு.., சாலை விபத்தில் பறிபோன உயிர்!!

டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு.., சாலை விபத்தில் பறிபோன உயிர்!!

டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு.., சாலை விபத்தில் பறிபோன உயிர்!!

பிரபல சின்னத்திரை டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு குறித்து இணையத்தில் வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் தொடர்ந்து மரண ஓலங்கள் கேட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மும்பையைச் சேர்ந்த டி.வி. நடிகர் அமான் ஜெய்ஸ்வால். அவருக்கு வயது  23. இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் அவர் தனது இருசக்கர வாகனத்தில் மும்பையில் உள்ள ஜோகேஷ்வரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய மோட்டார் சைக்கிள் ஒரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமான் ஜெய்ஸ்வால் படுகாயம் அடைந்த நிலையில் அவரை அருகில் இருக்கும் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் தர்திபுத்ரா நந்தினி என தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. aman jaiswal

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!

அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!

பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்..,  வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top