நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை “தமிழக வெற்றி கழகம்” என அறிவித்த போது, 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நமக்கு இலக்கு என்று தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான வேலைகளில் வேகம் காட்டி வருகிறார் தலைவர் விஜய். இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் தலைவர் விஜய் தலைமையில் “தமிழக வெற்றி கழகம்” கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ‘விஜய்’ காணொளி வாயிலாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது உறுப்பினர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது, தலைவர் விஜய் பேசியதாவது, கட்சிக்கு எதிராக எழும் விமர்சனங்கள் மற்றும் இடையூறு உள்ளிட்டவைகளை புன்னகையுடன் கடந்து செல்லுங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறினார். இதனை தொடர்ந்து நகரங்கள் மட்டுமின்றி குக் கிராமங்களிலும் நம்முடைய கட்சியை பற்றி தெரியப்படுத்த வேண்டும். மேலும் 2024 தேர்தலுக்கு பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என்றும் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.