Home » சினிமா » 2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!

2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!

2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!

இந்த ஆண்டு 2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி காட்டினார். இதையடுத்து ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் என விஜய் பிஸியாக இருந்து வருகிறார். மேலும்  தளபதி 69 படத்திற்கு பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி முழு அரசியல்வாதியாக மாற இருக்கிறார்.

மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 100 முதல் 130 வரை மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ள நிலையில், ஆனால் இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது குறித்து, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

அதாவது கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுக்குள் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார். மேலும் வருகிற மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களை சந்தித்து ஆங்காங்கே பொதுக் கூட்டங்களை நடத்த நடிகர் விஜய் திட்டம் தீட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம்2026 ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?..,  Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!

2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!

டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!

காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top