Home » செய்திகள் » TVK மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா? ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி!

TVK மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா? ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி!

தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா? ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி!

TVK மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண்: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) அன்று படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

TVK மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண்

மேலும் இந்த தவெக முதல் மாநாட்டை துர்கா தேவி(28) என்பவர் தொகுத்து வழங்கினார். இவர் விஜய்யின் தீவிர ரசிகை. கல்லூரி படிக்கும் பொழுது  விரிவுரையாளராக இருந்து வந்த இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. மேலும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு அங்கு நடந்த  நிகழ்வுகளை அனைத்தையும் தொகுத்து வழங்கி வந்தார்.

இதையடுத்து   கட்சி தொடங்கிய பிறகு கழகப் பேச்சாளராக தவெக அறிவித்துள்ளது. அதன் பிறகே அவர், மாநாட்டை தொகுத்து வழங்கினார். ஆனால் அவர் குரலை பார்த்து பலரும் ட்ரோல் செய்து வந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

“லப்பர் பந்து” பட நடிகைக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இந்த சீரியல் நடிகரா?

அந்த ட்ரோல்களை பார்த்துட்டு சிரிப்பு தான் வந்துச்சு. எனக்கு ஒரு பின்புலம், ஒரு நிறம் இருந்தா தான் ரசிப்பார்களா? பாராட்டுவீங்களா? ரெஸ்பான்ஸ் கொடுப்பீங்களா? என்று கேள்வி எழுப்பினர். அப்படி வெளீர் நிறம் நல்ல குரல் இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையே தவறானது. தமிழ் மண்ணை; தமிழ் மக்களை நம்பித்தான் நான் பேசினேன் என்று அழுத்தி கூறியுள்ளார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top