Home » செய்திகள் » நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவர் முழு அரசியலில் இறங்க இருக்கிறார். கடந்த வருடம் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி தொகுதியில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார்.

மேலும் 2026ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் இலக்கு என்று விஜய் அறிவித்த நிலையில் தொண்டர்கள் பலரும் கட்சி வேலையை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், தற்போது வரை கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்கள் தான் மாவட்ட தலைவர்களாக பதவி வகித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை பனையூரில் இருக்கும் TVK தலைமை அலுவலகத்தில் நாளை (ஜனவரி 10) தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,  இந்த கூட்டத்தில் TVK தலைவர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top