த.வெ.க தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்: மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதிகாலை 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர்தல் மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. மேலும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வரும் நடிகர்கள் வாக்குச்சாவடிக்கு எப்படி வருகிறார்கள் என்று அவர்களுடைய ரசிகர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் கடந்த தேர்தலில் விஜய் சைக்கிளில் சென்று வாக்கு பதிவு செய்தார். அதனால் நேற்று நடந்த தேர்தலில் அவர் எப்படி வர போகிறார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் அவர் யாருக்கு ஓட்டு போட போகிறார் என்றும் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நேற்று சாதாரணமாக காரில் வந்த விஜய்யை பார்த்த மக்கள் அவரை உள்ளே விடாமல் சுற்றி வளைத்தனர். காவல்துறையின் உதவியுடன் உள்ளே சென்று வாக்கு பதிவு செய்து அங்கிருந்து கிளம்பினார். இந்நிலையில் அவர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதாவது நேற்று நடந்த தேர்தலில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக , விஜய் 200-க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த புகார் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.