தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா - பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா - பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!

மாணவர்களே ரெடியாகுங்க தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா: தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி கொண்டு இப்பொழுது டாப்பில் ஒரு நாயகனாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்1. தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தளபதி 69 படத்துடன் அவர் சினிமா கெரியரை முடித்து விட்டு மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார். இதற்காக “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி நிறுவினார். மேலும் வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் தொண்டர்களாக மாறி தற்போது மக்களுக்காக தீவிரமாக உழைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தவெக கட்சியை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வெ வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மூன்று மார்க் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அதே போல் இம்முறையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார். அதன்படி ஜூன் 28ஆம் தேதியும், ஜூலை 3ம் தேதியும் தளபதியே நேரில் சென்று கொடுக்க இருக்கிறார்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

இந்நிலையில்  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கான பாஸ் வழங்கும் பணி தொடங்கியது. கட்சியை தொடங்கி தலைவர் விஜய் கலந்து கொள்ள போகும் முதல் நிகழ்ச்சி இது தான்.  சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சென்று தலைவர் விஜய் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. thalapathy vijay news – kollywood king – box office collection maker

  1. Thalapathy vijay tvk party news update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *