பாராட்டு விழாவில் அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய் - அப்படி என்னென்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?பாராட்டு விழாவில் அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய் - அப்படி என்னென்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

தலைவர் தளபதி நடத்தும் பாராட்டு விழாவில் அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்: தமிழ் சினிமாவின் தூணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் இன்று 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க இருக்கிறார். இரண்டு பிரிவுகளாக இந்த விழா நடைபெற இருக்கிறது. அதன்படி, இன்று நடக்கும் நிகழ்ச்சியில் மதுரை, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அரியலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த பாராட்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்திற்கு தலைவர் விஜய் அதிகாலையிலே வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த விழாவிற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார் புஷ்ஷி ஆனந்த். குறிப்பாக மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதிய உணவு தடபுடலாக ரெடியாகி வருகிறது. அப்படி மதிய உணவில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். தற்போது மதிய விருந்துக்கான உணவு பட்டியல் வெளியாகியுள்ளது

Also Read: அஜித்தின் “Good Bad Ugly” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக்குழம்பு, தக்காளி ரசம், கதம்ப சாம்பார், ஆனியன் மனிலா என மதிய விருந்துக்கான உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் அனைவருக்கும் போதும் போதும் என்கிற அளவில் நிறைவான உணவு வழங்க வேண்டும் என்று தலைவர் விஜய் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் பாராட்டு விழா தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *