2026 தேர்தலில் TVK தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி: தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்தி கட்சி கொள்கைகளை அறிவித்தார்.
மேலும் அவர் அரசியல் குறித்து பேசியது, பல்வேறு கட்சிகளுக்கு இடையே பெரும் பயணத்தை உண்டாக்கியது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தவெக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தவெக கட்சி தலைவர் விஜய் முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி தற்போது 10 மாதத்தில் 10 மில்லியன் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்தியுள்ளது.
2026 தேர்தலில் TVK தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி இதான்! மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!
இந்நிலையில் தவெக கட்சி தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என அம்மாவட்டத்தின் தவெக கட்சி தலைவர் நா.ப.சிவா வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று மாவட்ட தலைவர் நா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது? – அங்கிருந்தபடியே வெளிநாட்டுக்கு போகலாம்!
அதில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனை தொடர்ந்து பேசிய நா.ப.சிவா, 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தவெக சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என தெரிவித்தார்.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்