Home » செய்திகள் » தவெக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவு – இறுதி கட்ட பணிகள் தீவிரம் !

தவெக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவு – இறுதி கட்ட பணிகள் தீவிரம் !

தவெக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவு - இறுதி கட்ட பணிகள் தீவிரம் !

அந்த வகையில் மாநாடு நடைபெற ஐந்து நாட்களே உள்ள நிலையில் மாநாட்டிற்கான பணிகள் ஏறக்குறைய தவெக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் அக்.27-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்அலங்கரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் திடலில் பார்வையாளர்கள் அமரும் இடங்கள் முழுவதும் 15 ஆயிரம் ஹை மாஸ் விளக்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இதையடுத்து திடலின் இருபுறமும் மொபைல் கழிப்பறை அமைக்க 300 தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாநாட்டு திடலின் முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்படுகிறது.

இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

மாநாட்டு மேடைக்கு விஜய் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மாநாடு நடைபெற ஐந்து நாட்களே உள்ள நிலையில் மாநாட்டிற்கான பணிகள் ஏறக்குறைய 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top