தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் சிறப்பு பரிசு - தவெக கட்சி தலைமை அறிவிப்பு !தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் சிறப்பு பரிசு - தவெக கட்சி தலைமை அறிவிப்பு !

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் சிறப்பு பரிசு அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி தற்போது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் தவெக கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கட்சி கொடியானது சிகப்பு, மஞ்சள் நிறத்தில் மத்தியில் யானைகள் வாகைப்பூ, அத்துடன் 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து கட்சி கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் என்றும் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் செப்டம்பர் 23ஆம் தேதி வி.சாலையில் கிராமத்தில் மாநாடு நடத்த,

தங்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

அதேவேளையில் மாநாட்டிற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது – பிரபல எழுத்தாளர்  பரபரப்பு கருத்து!

இந்நிலையில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைமை ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த உத்தரவில் கட்சியில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் விஜய் சிறப்புப் பரிசு வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, உறுப்பினர் சேர்கையில் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *