தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! புதிய செயலி அறிமுகம் - விஜய்யின் அடுத்தகட்ட மூவ் !தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! புதிய செயலி அறிமுகம் - விஜய்யின் அடுத்தகட்ட மூவ் !

தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! நடிகர் விஜயால் தொடக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த அதற்காக பிரத்தியேக செயலி ஒன்றை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சேர்க்கும் வகையில் பலதரப்பட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை இந்த வரம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியின் அறிமுகம் இந்த வரம் புதன் மற்றும் வியாழன் கிழமையில் அறிமுகம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது ! ஜி.யு. போப் மற்றும் கால்டுவெல் பள்ளிகே செல்லாதவர்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்.என். ரவி !

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *